08:20
0

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் பணிபுரியும் வானியளாளர்களால் மிகப்பொரிய தொலைகாட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

GRAVITY என அழைக்கப்படும் இத் தொலைகாட்டி தற்போது இயங்கு நிலையில் உள்ளது. மிக துல்லியமாக செயற்படுவதாக தெருவிக்கப்படுகிறது.

இதன் தொழிற்பாடு வானியளாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். ஏனெனில் பால்வெளியிலுள்ள கருந்துளைகளை இனி இலகுவாக ஆராய முடியும்.

இது எவ்வாறு தொழிற்படுகிறது?

அடிப்படையில் இது இதை ஆக்கும் நான்கு சிறிய அலகு தொலைகாட்டிகளை இணைக்கும் சக்தியை கொண்டுள்ளது.

இந் நான்கு தொலைகாட்டிகளிலிருந்தும் வரும் ஒளியை ஒருங்கிணைப்பதன் மூலம் மிக திருத்தமான கணிப்புக்களை தருகிறது.

இத்தொலை காட்டி 130 மீட்டர் விட்டத்தை கொண்டுள்ளது.

இதன் அதீத சக்தியை பயன்படுத்தி மிக தொலைவிலுள்ள பொருட்களின் அமைவிடத்தை திருத்தமாக கணிக்க முடியும் என சொல்லப்படுகிறது.

0 comments:

Post a Comment