06:05
0

லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உமிழ்நீரில் ஒரு புதுவகை உயிரினம் ஒட்டுண்ணியாக மறைந்து வாழ்வதை கண்டுபிடித்துள்ளனர்.

அது Bdellovibrio எனப்படும் பக்ரீரியா ஆகும். இது வெறும் 700 பரம்பரையலகுகளையே கொண்டுள்ளது.

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதிலும் இதுவே முதல் பக்ரிரிய இனம், அது தனது வாழ்க்கைக்கென முழுவதும் இன்னொரு பக்ரீரியாவில் தங்கியிருப்பது.

இது Gum disease, Cystic fibrosis மற்றும் Antimicrobial resistance போன்ற பல்வேறு மனித நோய்களுடன் தொடர்புபட்டது.

இவ்வகை உயிரினம் Washington பல்கலைக்கழக பல் மருத்துவ ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் உமிழ்நீர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளை RNA இழைகள் உமிழ்நீரில் இருப்பது அவதானிக்கப்பட்டது.

அதோடு அவை தற்போதைய எந்தவொரு உயிரினத்துடனும் ஒத்துப்போயிருக்கவில்லை.

இதற்கு முன்னரும் இதே வகை RNA இழைகள் உமிழ்நீரில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவை அப்போது பெரியளவில் முக்கியப்படுத்தப்படவில்லை.

ஆனால் தற்போது மிக ஆழமாக ஆராய்ந்ததில் அவை நுண் பக்ரியாக்கள் இன இனங்காணப்பட்டுள்ளது.

இவை Actinomyces odontolyticus எனும் வேறு வகை பக்ரீரியாக்களில் முழு ஒட்டுண்ணியாக வாழ்கின்றன.

Actinomyces பக்ரீரியாக்களின் வெளி மேற்பரப்பில் ஒட்டி வாழும் இவை தமக்குத் தேவையான போசணைகளை Actinomyces பக்ரீரியாக்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன.

இது போன்ற விருந்து வழங்கி, ஒட்டண்ணி இடைத்தொடர்புகள் பக்ரீரியாக்களிடையே பொதுவான ஒன்று என முன்னைய ஆய்வுகள் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment