17:45
0

Murmansk, Russia விலுள்ள ஆழமான துளையே புவியில் மிக ஆழமானது என அறியப்படுகிறது.

இதன் ஆழம் புவியோட்டிலிருந்து 12 கிலோமீட்டர்களாகும்.

இது முன்னர் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, கைவிடப்பட்ட எண்ணெய் கிணறாக நம்பப்பட்டுவந்தது.

ஆனால் உண்மையில் இது US, USSR இக்கிடையில் ஏற்பட்ட தொழில்நுட்ப போட்டி நிலைமைகளால் உருவான துளையாகும்.

அதாவது இருவரில் யார் புவியின் மையத்தில் துளைகளை ஏற்படுத்துவது என்பதாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இது அப்போது யாராலும் பெரிதுபடுத்தப்பட்டிருக்கவில்லை.

ஏனெனில் உலகம் விண்வெளியை நோக்கி சந்திரனில் தரையிறங்கிய காலம் அது.

இது இடம்பெற்ற காலப்பகுதி 1960 களிலாகும்.

இங்கு ரஷ்யா மற்றும் லண்டன் ஆய்வாளர்கள் தனித்தனியாக துளைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

அதில் யார் அதிகளவு ஆழமாக துளையிடுவது என்பதை தவிர வேறு எந்த நோக்கங்களும் இருந்திருக்கவில்லை.

லண்டனானது 'Project Mohole' எனும் பேரில் துளைகளை தோண்ட தொடங்கியிருந்தது. இவர்கள் கடல் மட்டத்திற்கு கீழே 11 700 அடிகள் தோண்டியிருந்தனர்.

ரஷ்யாவானது Kola Peninsula எனும் இடத்தில் தங்கள் வேலையை தொடங்கியிருந்தனர். இவர்கள் 1970 ஆம் ஆண்டு தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரை தோண்டியிருந்தனர். இதுதான் தற்போது அதிக ஆழமானதாக பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment