23:04
0

நாக்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஐ.க்யூ எனப்படும் நுண்ணறிவுத்திறன் சோதனையில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் ஐ.க்யூ. அளவுக்கு இணையான திறன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த ருத்விக் மற்றும் சேனாலி தம்பதியரின் 11 வயது மகன் அகிலேஷ் சந்தோர்கர். கோடை விடுமுறையை கொண்டாட கடந்த ஜூன் மாதம் இவர்கள் ஸ்காட்லாந்திற்கு சென்றிருந்தனர். அப்போது, உலக அளவில் மனிதர்களின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.) கண்டறியும் அமைப்பான மென்சா நடத்திய தேர்வில் சிறுவன் அகிலேஷ் கலந்துகொண்டுள்ளான்.

இந்நிலையில் தற்போது, மென்சா அமைப்பில் இருந்து அகிலேஷ் குடும்பத்தாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அகிலேஷின் ஐ.க்யூ அளவு 160 உள்ளதாக குறிப்பிடப்பட்டதை கண்ட அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்துள்ளது.

இதுகுறித்து அகிலேஷின் தாயார் கூறுகையில், அகிலேஷின் ஐ.க்யூ. அளவு இவ்வளவு அதிகம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இவனை சிறு வயதிலேயே சிறப்பானவனாக பார்த்தோம்.

அவனுக்கு 4 வயது இருக்கும் போதே jigsaw puzzles மற்றும் ’லெகோ பிளாக்’ விளையாட்டை பூர்த்தி செய்வான். இதுபோன்றவை 9 வயதுடையவர்களால் மட்டுமே முடியும் என்றார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோருக்கு இணையாக நுண்ணறிவுத்திறன் கொண்ட அகிலேஷ், உலகின் 2 சதவீத அறிவார்ந்த மக்களில் முதல் பத்து பேரில் ஒருவராக இணைந்துள்ளார்.

‘மனிதனின் சராசரியான ஐ.க்யூ. அளவு 85-ல் இருந்து 115 வரை இருக்கும் நிலையில், தமது மகனுக்கு இவ்வளவு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. 140 அளவு வரைக்கும் இருக்கும் என்று நினைத்தேன் என அகிலேஷின் தந்தை ருத்விக் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வானியலாளராக விரும்பும் இவர், தற்போது 'கருந்துளை' பற்றிய ஆய்விலும் ஈடுபட்டு வருகிறாராம்.

0 comments:

Post a Comment