17:47
0

நாசாவானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு DNA Sequencer ஒருவரை அனுப்பியுள்ளது.

விண்வெளியில் இடம்பெறப்போகின்ற முதலாவது DNA sequencing இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கென விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவொன்று யூலை 18 அன்று SpaceX Dragon craft மூலம் விண்வெளி நோக்கி புறப்படுகின்றது.

இதற்கு முன்னர் விண்வெளி வீரர்களது மாதிரிகள் புவிக்கு கொண்டுவரப்பட்டே சோதிக்கப்பட்டிருந்தன. இதனால் அதற்கு பல மாதங்கள் எடுத்திருந்தன.

இதற்கென ஈர்ப்பு குறைந்த விண்வெளிக்கென விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ள Biomolecule Sequencer எனும் மிகச்சிறிய கருவி மூலம் தங்களது DNA இனை sequence செய்ய முடியும் என சொல்லப்படுகிறது.

இதன் மூலம் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தை பேணவும், நுண்ணுயிர்களை அவதானிக்கவும் உதவும் எனப்படுகிறது.

இதைக்கொண்டு முக்கியமாக DNA இனை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு உயிரினத்தையும் சூரியத்தொகுதியில் அடையாளப்படுத்த முடியும் என நாசா சொல்கிறது.

இதே நேரம் நாசாவானது அவத்தை மாறும் வெப்பப் பரிமாற்றியையும் அனுப்பியுள்ளது.

இத் தொழில்நுட்பம் வருங்கால விண்கலங்களின் மற்றும் புதிய வகை முப்பரிமாண சூரியக்கலங்களில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களை கட்டுப்படுத்தப் பயன்படும் எனப்படுகிறது.

இந்த Dragon வெற்றிகரமாக தனது பயணத்தை ஆரம்பித்துவிட்டது.

அடுத்த விண்வெளி வழங்கல் நடவடிக்கை ஓகஸ்ட் 2016 இல் நிகழும் என சொல்லப்படுகிறது.

0 comments:

Post a Comment