கடற்கரைக்கு சென்றால் அங்கிருக்கும் மணலில் கோவில், வீடு செய்து விளையாடுவோம்.
எப்படி இந்த மணல் வந்திருக்கும் என்று என்றாவது யோசித்தது உண்டா?
கடற்கரையில் மணல்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு கடலில் ஏற்படும் அலைகளே காரணமாகும்.
இந்த அலைகள் காற்றினால் வேகமாக கரையை நோக்கி வரும் பொழுது சிறு சிறு கற்களையும் அரித்துக் கொண்டு வருவதால், அந்த கற்கள் ஒன்றோடு ஒன்று மோதி கிரைண்டரில் அரைக்கப்படும் மாவைப் போல கற்கள் அரைக்கப்பட்டு கடலில் அதிக மணல் உருவாக காரணமாக இருக்கின்றது.
மேலும் பூமியின் சுழற்சியாலும், காற்றின் வேகத்தாலும் தொடர்ந்து அலைகள் ஏற்பட்டு ஈர்ப்பு விசையின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலுக்குள்ளேயே பாறைகள் நொறுங்கி அதிக மணலை கடற்கரைகளில் உருவாக்குகிறது.
கடல் அலைகள் ஏற்பட என்ன காரணம்?
நிலா மற்றும் சூரியன் இவை இரண்டும் மாறி மாறி செலுத்தும் ஈர்ப்பு விசை தான் கடலில் அலைகள் உருவாவதற்கு காரணமாக உள்ளது. இதனால் கடலில் உயர்வான மற்றும் தாழ்வான அலைகள் எப்போதும் மாறி மாறி உருவாகிறது.

0 comments:
Post a Comment