04:11
0

ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் செயலிகளைப் (ஆப்ஸ்) பயன்படுத்துவதை ஆராய்ந்தால், அப்பிளை விடவும் சம்சுங் முன்னணியில் திகழ்வதாக ஆய்வொன்று கூறுகிறது.

சம்சுங் உரிமையாளர்கள் சராசரியாக மாதமொன்றில் 84 நிமிடங்களை செயலிகளில் செலவிடுகிறார்கள். இது அப்பிள் உரிமையாளர்கள் செயலிகளில் செலவழிக்கும் நேரத்தை விடவும் 22% அதிகமானதாகும்.

செயலிகளை வடிவமைப்பவர்களைப் பொறுத்தவரையில், ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் செயலிகளில் எந்தளவு நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது முக்கியமானது.

ஏனெனில், ஒரு பயனாளி செயலியில் ஆகக்கூடுதலான நேரத்தை செலவழிக்கும் பட்சத்தில், அந்த செயலியை விலை கொடுத்து வாங்கக்கூடிய சாத்தியம் அதிகரிக்கிறது. அத்துடன், கூடுதலாக நேரம் செலவழிக்கப்படும் செயலிகளில் விளம்பரம் செய்வதற்கு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

0 comments:

Post a Comment