04:15
0

எதிலும் ரோபோ, எல்லாவற்றிலும் ரோபோ என்பது எதிர்கால நியதி.

ரோபோக்கள் இல்லாத துறையேதும் கிடையாது என்றளவிற்கு மனித இயந்திரங்கள் வியாபித்துள்ளது.

ஆடை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் மெஷின்களை இயக்க ஆள் தேவை. எனினும், அமெரிக்காவைச் சேர்ந்த செவ்போ என்ற நிறுவனம் ஆளில்லாமல் ஆடைகளைத் தைக்கும் ரோபோவை தயாரித்துள்ளது.

ஆடை தைக்கும் மெஷின்களைப் பயன்படுத்துகையில் துணியை இலாகவமாக கையாள வேண்டும். அந்த ஆற்றல் செவ்போ ரோபோவிற்கு கிடையாது என்பதால் ரோபோவின் தயாரிப்பாளர்கள் புதிய உத்தியைக் கையாண்டுள்ளார்கள்.

இதன் பிரகாரம், மெல்லிய துணி பொலிமர் இரசாயனத்தின் மூலம் மிடுக்கானதாக மாற்றப்படும். அந்தத் துணியைக் கொண்டு ரோபோ தயாரிக்கும் ஆடை மீண்டும் கழுவப்படும். கழுவியவுடன் ஆடை தயாராக இருக்கும்.

0 comments:

Post a Comment