04:21
0

கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும்.

மேலும் கிணறு அமைப்பதில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும், அதற்கு காரணங்கள் இருக்கின்றன.

வட்டமாக கிணறு அமைப்பதற்கான காரணம்

வட்டம் என்பது இரண்டு அரை வட்ட ஆர்ச்சுக்கள் ஒன்று சேர்வதால் உருவாகின்றது.

பொதுவாக ஆர்ச் வடிவ வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு.

அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் போன்றவைகள் அனைத்து இடங்களிலும் ஆர்ச் வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கத்திலும் கிணற்றின் வடிவம் கலையாமல் இருக்க செய்வது கிணற்றை சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைகள்.
கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது, எனவே தான் கிணறு வட்டமாக அமைக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment