02:34
0

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையை தொடர்ந்து அவற்றுக்கான பல்வேறு துணைச் சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது வயர்லெஸ் முறையில் அனைத்து வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளையும் சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜிங் பேட் (Charging Pad) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Innotek எனும் இச் சாதனத்தை LG நிறுவனம் வடிவமைத்து அறிமுகம் செய்கின்றது.

சாதாரண வயர் கொண்ட சார்ஜர்கள் மூலம் கைப்பேசி சார்ஜ் செய்யப்படும் வேகத்தினை விடவும் இச் சாதனத்தின் உதவியுடன் உயர் வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும்.

அதாவது 15 வாற் மின்சக்தியினை வெளியிடும் இதன் ஊடாக 30 நிமிடத்தில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

முதன் முறையாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இம் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

0 comments:

Post a Comment