06:43
0

ஸ்டாண்ட் வசதி இல்லாமல், தடியான டயர்களுடன் உருவாகியுள்ள பி.எம்.டபிள்யூ மின்சார பைக் விரைவில் பொது விற்பனைக்கு வரவுள்ளது.

மோட்டார் பைக் ஓட்டுவதென்றால் பலருக்கும் அலாதி பிரியம் இருக்கவே செய்யும்.

அந்த வகையில் உலகின் மிகப் பெரிய கார் நிறுவனங்களின் ஒன்றான பி.எம்.டபிள்யூ BMW Motottad VISION NEST 100 என்னும் சூப்பர் மோட்டார் பைக்கை அறிமுகம் செய்யவுள்ளது.

பல வித்தியாசமான சிறப்பம்சங்களை கொண்ட இந்த பைக்கானது ஒற்றை பிரேமில் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஸ்டாண்ட் கிடையாது, இதன் டயர்கள் மிக தடியானதாக உள்ளதால் அப்படியே அதை நிறுத்தலாம்.

மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் உள்ள இணைப்பை இதை ஓட்டுவது மூலம் நாம் உணரலாம் என இதன் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இதனிடையில் இந்த சூப்பர் பைக்கானது அடுத்த ஆண்டு பொது விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.


0 comments:

Post a Comment