18:34
0

அறிவியல் ஆய்வின் மூலம் மேற்கு அண்டார்டிகாவில் இருக்கும் ஸ்மித் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி, அந்த பனிப்பாறைகளின் தடிமன் 7 ஆண்டுகளில் 0.5 கிமீ அளவு குறைந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இதன்மூலம் புவியின் வெப்பநிலை அதிகரிப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

உருகும் பனிப்பாறைகள் குறித்து, பனிக்கட்டியை ஊடுருவிச் செல்லும் ராடார் மற்றும் லேசர் கதிர்கள் ஆகியவற்றின் மூலம் இருவேறு சோதனைகள் செய்யப்பட்டது.

இந்த இருவேறுபட்ட சோதனையின் போது, ஒரே மாதிரியான முடிவுகள் வந்தது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன நாசாவின் ஆய்வாளர் அலெக்செண்டர் கூறியுள்ளார்.
மேலும் மேற்கு அன்டார்டிகா மற்றும் கிரீன்லேண்டில் உள்ள பனிப்பாறைகள், கடல் மட்டத்தை பல மீட்டர் அளவுக்கு உயர்த்தக்கூடியவையாக உள்ளது.

எனவே இந்த பனிப்பாறைகள் முற்றிலும் உருகினால், அருகில் உள்ள பல நகரங்கள் மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் எத்தனை பனிப் பாறைகள், எந்தெந்த இடங்களில் எந்த வேகத்தில் உருகுகின்றன என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

0 comments:

Post a Comment