21:52
0

சம காலத்தில் அனைத்து விடயங்களும் பேஸ்புக் மயப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதை தமது பக்கத்தில் ஸ்டேட்டஸ்ட் ஆக போட்டுவிடுகிறார்கள்.

இதேபோல பல்வேறு நிறுவனங்களும் தமது நிழ்ச்சிகளை பேஸ்புக் ஊடாக தெரிவித்து வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு பேஸ்புக் நிறுவனம் Facebook Events எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

அதிலும் பயனர் ஒருவர் இருக்கும் இடத்தை ஒட்டி நடக்கும் நிகழ்வுகளை தெரியப்படுத்துவதும் இந்த அப்பிளிக்கேஷனின் மற்றுமொரு சிறப்பியல்பு ஆகும்.

நாள்தோறும் 100 மில்லியன் வரையான பயனர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பில் பேஸ்புக்கின் ஊடாக தகவல்களை பெறுகின்றனர் என்பதனையும் அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இவ் அப்பிளிக்கேஷன் தற்போது iOS சாதனங்களான iPhone, iPad என்பவற்றிற்காகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் ஏனைய மொபைல் சாதனங்களுக்கும் கிடைக்கப்பெறும் என்பதில் எவ்விய ஐயமும் இல்லை.


0 comments:

Post a Comment