ஆராய்ச்சி என்பது பல்வேறு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு இடையறாத செயற்பாடு ஆகும்.
இதில் உயிரினங்கள் பற்றியும் அதிகளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
இப்படியிருக்கையில் பறவைகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவந்த ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிசய பறவை ஒன்று தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதாவது இப் பறவைகள் தொடர்ச்சியாக 10 மாதங்கள் வரை பறப்பில் ஈடுபடக்கூடியதாக இருப்பதுடன் இக் காலப் பகுதியில் அவற்றினால் ஒரு போதும் தரையிறங்காது இருக்க முடியும் என கண்டறிந்துள்ளனர்.
மிகவும் சிறிய வகை பறவையாக காணப்படுவதுடன் தொடர்ச்சியான பறப்பிற்கு பின்னர் இரண்டு மாதங்கள் வரை நீண்ட ஓய்வினை எடுத்துக்கொள்ளுமாம்.
swift என பெயரிடப்பட்டுள்ள இப் பறவைகள் பதின்மூன்றினைக் கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக குறித்த பல்கலைக்கழக மாணவர்களால் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
இவ் ஆராய்ச்சியின் போதே குறித்த ஆச்சரியமான செயற்பாட்டினை அப் பறவைகளிடமிருந்து கண்டறிந்துள்ளனர்.
0 comments:
Post a Comment