19:00
0

பொதுவாக நடுவானில் பறக்கும் விமானத்தின் எஞ்சின்கள் தொழில்நுட்பக் கோளாறு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற சில காரணங்களால் தான் செயலிழக்கும்.

விமானத்தின் உள்ள அனைத்து எஞ்சின்களும் செயலிழந்தால் கூட விமானம் படிப்படியாக கீழே இறங்கி, குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் திறனை பெற்றுள்ளது.

எஞ்சின்கள் செயலிழந்தால் விமானம் எப்படி பறக்கிறது?

விமானத்தில் உள்ள எஞ்சின்கள் செயலிழக்கும் போது, அதன் ஆட்டோபைலைட் கட்டுப்பாட்டு சாதனங்களும் செயலிழந்து விடுகிறது.

அப்போது எரிபொருள் சப்ளை தானியங்கி முறையில் நிறுத்தப்பட்டு, அந்த விமான எஞ்சின் பகுதியில் உள்ள த்ரஸ்ட் விசையின் காரணமாக விமானங்கள் முன்னோக்கி பறக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றது.



த்ரஸ்ட் விசையானது விமானங்களுக்கு போதுமான அளவில் கிடைக்காமல் இருக்கும் போது, விமானம் பறக்கும் திறனை இழக்காமல், முன்னோக்கி செல்லும் திறனை மட்டும் இழக்கின்றது.
மேலும் விமானத்தின் அடிப்பாகத்தில் உள்ள மின்விசிறி போன்ற அமைப்பானது, வெளிக்காற்று விசையின் மூலமாக சுழன்று விமானத்திற்கு போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்து தருகிறது.

எனவே இந்த மின்விசிறி மூலம் விமானத்தின் கட்டுப்பாட்டு சாதனங்கள் அதற்கு தேவையான மின்சாரத்தை பெறுகிறது.

மேலும் விமானத்தின் பின்புறத்தில் இருக்கும் துணை பேட்டரி யூனிட்களிலிருந்து ஹைட்ராலிக் கருவியை இயக்குவதற்கு மின்சாரம் பெறப்படுகிறது.

இந்த மின்சாரமானது, விமானத்தின் திசை மாற்றும் அமைப்பு, பிரேக்குகள், லேண்டிங் கியர்கள் போன்ற விமான சக்கரங்களை இயக்குவதற்கு பயன்படுகிறது.

0 comments:

Post a Comment