18:37
0

நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ என்பவர் விண்வெளியில் இலைகோஸ் வகை கீரையை பயிரிடும் புதிய ஆய்வு ஒன்றை தொடங்கி வைத்துள்ளார்.

பூமியில் பருவத்துக்கு ஏற்றப்படி விவசாயிகள் நிலத்தில் பயிரிடுவது போல விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை கொடுக்க வேண்டும்.

எனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைக்கோஸ் கீரை வகையை ஆய்வாளர்கள் பயிரிட்டுள்ளார்கள்.

விண்வெளியில், பயிரிடும் பணிகள் தாமதமாக நடந்தாலும், அனைத்து செடிகளும் மிகவும் சிறப்பாக பயிரிடப்பட்டுள்ளது என்றும்,

மேலும் கீரை வகைகள் வளர நான்கு வாரங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே பயிர் வகைகள் நன்றாக வளர்ந்ததும் அறுவடை செய்ய வேண்டும் என்று நாசாவின் காய்கறி திட்ட மேலாளர் நிக்கோல் டபோர் கூறுகின்றார்.

மேலும் செவ்வாய் கிரக ஆய்வுகளுக்காக எதிர்காலத்தில் செல்லும் மனிதர்களுக்கு, உணவுப் பிரச்சினை குறித்து எந்த பற்றாக்குறையும் வரக் கூடாது என்பதற்காக விண்வெளியில் பயிர்கள் விளைவிக்கும் ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

0 comments:

Post a Comment