கியூரியோசிட்டி ரோவர் விண்கலமானது செவ்வாய் கிரகத்தினை சல்லடை போட்டு ஆராய்ச்சி செய்து வருகின்றது.
இந் நிலையில் தற்போது விசித்திரமான புனல் வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு கிலோ மீற்றர் விட்டம் கொண்ட இவ் வடிவமானது பல வர்ணங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
அப் பகுதியில் நீர், வெப்பம் மற்றும் விட்டமின்கள் ஒன்றிணைந்து காப்படுவதனாலேயே அப் பகுதி பல வர்ணங்களில் தென்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து பகுதியில் எரிமலைக்குழம்புகள் பனிக்கட்டிகளுடன் இணைந்ததனால் இவ்வாறானதொரு தோற்றம் உண்டாகியிருந்ததாகவும், இதேபோன்ற செயற்பாடு செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் காணப்படும் இவ் வடிவமும் விஞ்ஞானிகளால் Hellas Planitia எனப் பெயரிடப்பட்டிருக்கும் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment