இலங்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்- 2012
- 2012 நவம்பர் : இலங்கையின் முதலாவது செயற்கை கோள். “சுப்ரீம் சட்” ரோஹித ராஜபக்ஷ் வினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 2012 நவம்பர் : இலங்கையின் செவனகல, பதியத்தலாவ, மன்னம்பிட்டி, ஹிங்குராங்கொட சிவப்பு மழைக்கு காரணம் “பெரனைட்” காணப்பட்டமை
- 2012 ஒக்ரோபர்; : சமுத்திர ஆய்வு, பரிசோதனைக் கான தயாரிக்கப்பட்ட “சமுத்ரிகா கப்ப்பல்” அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் ஆரம்பம்
- 2012 செப்டம்பர் ராமன்ய மகாபீடத்தின் 12 வது மகாநாயக்க தேரர் வேவல் தெனிய மேதா லங்க்கா தேரர் தனது 82 வது வயதில் காலமானார்
- ஜனவரி 9, 2013 : திவிநெகும (வாழ்வின் எழுச்சி) என்ற சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது
- ஜனவரி 9, 2013 : சவுதியில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் தூக்கிலிடப்பட்டார்
- 2013 ஜனவரி மாதம் முதல் ரஸீகீக் ஸரூக். இலங்கை வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இலங்கையின் புதிய 44வது பிரதம நீதியரசராக மொஹான் மைத்திரி பீரீஸ் 2013 ஜனவரியில் பதவியேற்றார்.
- ஷிராணி பண்ட்டாரநாயக்க்கா. இலங்கையின் முன்னாள் (43வது) பிரதம நீதியரசராவார் 2013 ஜனவரியில் 1978ம் ஆண்டுஅரசியலமைப்பின் 30ம் பிரிவின் (1), (2) வாசகங்களுக்கமைய ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டார்
- 2013 மார்ச்சில் : இலங்கையின் பாரிய சூரிய படல மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
- 2013 மார்ச் : பேராசிரியர் கும்புறுகமுவ வஜிர தேரருக்கு மியன்மார் அரசின் உயரிய கௌரவ விருதான அக்கமஹா பண்டித பட்டம் வழங்கி கௌரவித்தது.
- 2013 மார்ச் : இலங்கையின் இரண்டாவது விமான நிலையமான மஹிந்த ராஜபக்ஷ் சர்வதேச விமான நிலையம் மத்தளவில் திறந்து வைக்கப்பட்டது.
- 2013 மார்ச் : கொரியா சன்மூன் பல்கலைக்கழகம் இலங்கைப் பிரதமர; தி.மு.ஜயரட்ண அவர்களுக்கு தர்ஷ்னபதி கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது.
- இலங்கையில் வாக்குரிமையை நினைவூட்டுவதற்காகயூன் 1 ம் திகதி வாக்க்காளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
- 2013 மே : இலங்கை பெயரிட்ட தெற்காசியாவில் உருவான சூறாவளி – ”மகாசென்“
- 22 மே 2013 : இலங்கையில் சியாம் நிகாய உபசம்ப்பாத தாபிக்கப்பட்டு 260ஆவது ஆண்டு நிறைவு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்றது.
- 2013 யூன் : இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள உலமாக்களுக்கான பல்கலைக்கழகம் : மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் (ரிதிதென்ன)
- 11 யூலை 2013 : தனது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு இலங்கையின் உதவியை நாடும் நாடு : மாலைதீவு
- August: கொழும்பு – கட்டுநாயக்கா அதி வேக நெடுஞ்சாலை தூரம் 25.8 கி.மீற்றர்கள்.
- 2013 ஒக்ரோபர்: இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நனோ தொழில்நுட்ப பூங்கா – ஹோமாகவில் திறந்து வைக்கப்பட்டது.
- தெயட்ட்ட கிருல தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
- 7 ஆவது 2013 இல் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை
- 8 ஆவது 2014 இல் புத்தளம், குரநாகலை கேகாலை.
- மஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா. அமைந்துள்ள இடம் ரண்மிஹிதென்ன.
இலங்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்- 2014
- 2014 March காணாமல் போன, உலகநாடுகளால் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போன விமானம்.
- விமானம் : MH 370 – மலேசியா
- பயனம் : மலேசியாவிலிருந்து சீனா
- பயனிகள் : 339
- 2014 இல் சுட்டு வீழத்தப்பட்ட விமானம்.
- விமானம் : MH 17 – மலேசியா
- பயனம் : நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் இலிருந்து கோலாம்
- சுட்டுவீழ்த்தியவர்கள் : உக்ரைன் கிளர்ச்சியாளர்கள்
- பயனிகள் : 298
- 2014 விபத்துக்குள்ளான கப்பல்
- கப்பல் :
- நாடு : தென்கொறியா
- சென்ற இடம் : Jeju Seaol
- மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் வைரஸ் நோய் :
- வைரஸ் : இபோலா – Ebola
- முதலில் பரவிய நாடு : நைஜீரியா – 1976
- FIFA உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள்
- நடைபெற்ற நாடு : பிரேசில்
- வெற்றி பெற்ற நாடு: ஜேர்மனி (4 வது தடவை)
- இறுதிப ; போட்டி : ஜேர்மனி 1 – ஆஜன்டினா 0
- தங்க பாதணி : James Rodriguez
- அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பம் :
- Goal line technology – 14 கமரா பயன்படுத்தப்பட்டது.
- 20 ஆவது பொதுநலவாய விளையாட்டுக்கள் :
- நடைபெற்ற நாடு : ஸ்கொட்லான்ட்
- அதிக தங்கப்பதக்கம் வென்ற நாடு : பிரித்தானியா
- இலங்கையின் பதக்க விபரம் : 1 வெள்ளிப்பதக்கம்(பழுதூக்குதல் சுரேஸ் பீரிஸ்
- UNCHR இன் புதிய ஆணையாளர் Zeid Ruad Al-Hussain
- G-77 நாடுகளின ; மாநாடு
- நடைபெற்ற நாடு : பொலீவியா
- கலந்து கொண்ட நாடுகள் : 133
- 2014.1.1 இல் Euro நாணயத்தை ஏற்றுக்கொண்ட நாடு : லட்வியா
- 2015.1.1 இல் Euro நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் நாடு : லித்துவோனியா
- 10 வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்ட Rostta என்ற விண்கலம் 67P/CG என்ற வால் நட்சத்திரத்தை 2014 ஓகஸ்ட் அடைந்தது.
- இந்தியாவின் புதிய பிரதமா; : நரேந்திர மோடி (15 ஆவது பிரதமர்)
- இந்தியாவின் புதிய மானிலம் : தெலுங்கானா (29 ஆவது மானிலம்)
- BRICS மாநாடு : 2014 பிரேசிலில் இடம்பெற்றது
- விளையாட்டுப் போட்டி விபர அட்டவணை
- கிரிக்கட்
- 2015 – அவுஸ்ரேலியா, நியூசிலாந்து
- 2019 – இங்கிலாந்து
- 2013 – இந்தியா
- Foot Ball
- 2018 -ரஷ்யா
- 2022 – கட்டார்
- ஒலிம்பிக்
- 2016 – பிரேசில் – லியோடியெனிரோ
- 2020 – யப்பான் – டோக்கியோ
இலங்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்- 2015
- ஜனவரி 2: வடக்கே தொடருந்து சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டது.
- ஜனவரி 8: ஜனாதிபதித் தேர்தலில் 2015: சராசரியாக 70 வீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரமராகி இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
- ஜனவரி 9: ஜனாதிபதித் தேர்தலில் 2015: வட, கிழக்கு, மற்றும் மலையக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அறிவித்தார்.
- ஜனவரி 11: ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராசபக்ச ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சி செய்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கையின் புதிய அரசு விசாரணை செய்யும் என அறிவிக்கப்பட்டது.
- ஜனவரி 14: ஊவா மாகாணசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. ஹரின் பெர்னாண்டோ முதலமைச்சரானார்.
- ஜனவரி 21: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரசியலமைப்பின் 34வது பிரிவுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபொது மன்னிப்பு வழங்கினார். வாக்குரிமையுடன் இழந்த நான்கு நட்சத்திர ஜெனரல், பதக்கங்கள், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 28: இலங்கையின் தலைமை நீதிபதி மொகான் பீரிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து அகற்றி, சிராணி பண்டார நாயக்கவை மீண்டும் தலைமை நீதிபதியாக நியமித்தார்.
- பெப்ரவரி 1: வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெப்ரவரி 28ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்தன.
- பெப்ரவரி 2: ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்தார்.
- இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- பெப்ரவரி 7: சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான புதிய அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று எதிர்க்கட்சிகளினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
- பெப்ரவரி 5: ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
- பெப்ரவரி 6: கிழக்கு மாகாண முதலமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக் கட்சியின் நசீர் அகமது பதவியேற்றார்.
- பெப்ரவரி 10: இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்ற தீர்மானம் வடமாகாண முதலமைச்சர் விக்னேசுவரனால் வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
- கொழும்பில் நெலும் பொக்குன (தாமரைத் தடாக) வீதி மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
- பெப்ரவரி 15: இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா சென்றார்.
- மார்ச் 3: விடுதலைப் புலிகளின் கடற்புலி மகளிர் பிரிவுத் தலைவியாக பணியாற்றிய முருகேசு பகீரதி என்பவரும், அவரது 8 வயது மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
- கிழக்கு மாகாண சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்தது.
- மார்ச் 10: விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் மீளமைக்க முயற்சி செய்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாமல் 362 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பாலேந்திரன் ஜெயகுமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
- இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
- மார்ச் 14 : இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மன்னாருக்குப் பயணம் மேற்கொண்டு தலைமன்னார் வரையான தொடருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார்.
- நரேந்திர மோதி யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார். மடமாகாண முதல்வர் க. வி. விக்னேசுவரனை சந்தித்து உரையாடினார். யாழ்ப்பாணம் வந்த முதலாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் மோதி பெற்றார்.
- மார்ச் 22: சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து அனைவரும் அமைச்சுப் பதவிகளையும்
- மார்ச் 23: பலாலி பிரதேசத்தில் உள்ள வளலாய் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சில காணிகளை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இடம்பெற்றது
- மார்ச் 31: 2006 இல் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பாக கடற்படை அதிகாரி ஒருவரும், முன்னாள் கடற்படையினர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- ஏப்ரல் 22: இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டார். இவருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிகால் ஜயதிலக, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ. ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்
- ஏப்ரல் 29: ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் முக்கியமான 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 215 வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- மே 13: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
- மே 20: வடக்கே புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன.
- சூலை 1: இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச தாம் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
- ஆகத்து 17 – இலங்கை பாராளுமன்றத் தேர்தல், 2015: ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி 106 இடங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும் கைப்பற்றின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களை வென்றது
- செப்டம்பர் 25: மலையகத்தில் இறம்பொடையில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
- அக்டோபர் 14: 2005 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
- சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
நவம்பர் 11: நீண்டகாலமாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் கொழும்பு நீதிமன்றம் ஒன்று பிணையில் விடுவித்தது.
நவம்பர் 14: நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்கக் கோரி ஏழாவது நாளாகத் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர்.
நவம்பர் 26: சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டிசம்பர் 20: இலங்கையின் வடக்கே முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் “தமிழ் மக்கள் பேரவை” என்ற அரசியல் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment