சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமியில் இருந்து அனைவரும் இனி இருந்த இடத்திலிருந்தே காண முடியும் என நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையமானது பல நாடுகள் சேர்ந்து கூட்டு முயற்சியால் உருவாக்கியதாகும்.
இது பூமியிலிருந்து சுமார் 400 கி.மீட்டர் தொலையில், விநாடிக்கு 7.6 கி.மீட்டர் வேகத்தில் விண்வெளியில் சுற்றி வருகிறது.
இதனிடையில், சர்வதேச விண்வெளி நிலையத்தை இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் வசிக்கும் ஒரு நபர் இரு தினங்களுக்கு முன்னர் அங்கு பார்த்ததுடன் வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் விட்டுள்ளார்.
இப்போது எல்லோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நான்கு நிமிடங்கள் வரையில் வெறும் கண்ணால் காண நாசா நிறுவனம் https://spotthestation.nasa.gov/home.cfm என்ற இணையதளத்தை வடிவமைத்துள்ளது.
இந்த தளத்துக்கு சென்று நாம் வசிக்கும் ஊர் மற்றும் பகுதியை அதில் குறிப்பிட்டால் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாம் குறிப்பிட்ட பகுதிக்கு எப்போது வந்து செல்லும் என்ற விடயம் விபரமாக அதில் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment