ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் தொழிலில் இருக்கும் கடும் போட்டியை சமாளிக்க வித விதமான போன்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் Vphone S8 என்னும் உலகின் மிகச்சிறிய மற்றும் நல்ல சிறப்பம்சங்களை கொண்ட டச் போன் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
இந்த Vphone S8-ஆனது 46.7mm x37.3 mm x9.9 mm என்கிற அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது, இதன் எடை 30 கிராம் ஆகும்.
இந்த போனானது அலுமினியம், மெக்னீசியம் ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
Vphone S8 ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இயங்குவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் நாம் பெரிதும் விரும்பும் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை உபயோகப்படுத்த முடியும்.
128MB RAM மற்றும் 64MB RAM கொண்ட இந்த போன் 8GB இன்னர் மெமரியை கொண்டுள்ளது.
மேலும் ப்ளுடூத், ரேடியோ, USB, லைட் சென்சார் வசதிகள் இதில் உள்ளது. இது 380 MAH பேட்டரியை கொண்டு செயல்படுகிறது.
இதில் 2G நெட்வொர்க் மட்டுமே உபயோகிக்க முடியும் மற்றும் இதில் ரிமோட் கமெரா வசதி உள்ளது.
0 comments:
Post a Comment