06:26
0

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்க்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கும் முக்கிய 3 வழிகளை உலக கோடீஸ்வரரான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசொப்ட் நிறுவனரும் உலக கோடீஸ்வரர்களில் முதன்மையானவருமான பில் கேட்ஸ் அமெரிக்கா நடைபெற்ற தொழில் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அப்போது, தற்போது அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்க்கொண்டு இளைஞர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும்? என பில் கேட்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பில் கேட்ஸ் பதிலளித்தபோது, ‘உலக நிறுவனங்கள் நவீனமாக மாறி வரும் சூழலில் வேலைவாய்ப்பை பெற போராடும் இளைஞர்களும் தங்களை நவீனப்படுத்த வேண்டும்.

  • குறிப்பாக, அறிவியல், கணிதம் மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று துறைகளில் அடிப்படை அறிவையும் திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம்.
  • எதிர்காலத்தில் இந்த மூன்று துறைகளின் பயன்பாடு அதிகளவில் இருக்கும் என்பதால், இத்துறைகளில் திறமை வாய்ந்தவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்’ எனக் கூறியுள்ளார்.
  • சர்வதேச அளவில் தனது தொண்டு நிறுவனம் மூலம் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பில் கேட்ஸ் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்காக சுமார் 1 பில்லியன் டொலர் வரை நிதியுதவி அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
  •  

0 comments:

Post a Comment