06:19
0

உலகிலேயே பரப்பளவில் மிகச் பெரிய நாடு எது? ரஷ்யா

இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது.

11 விதமான கால வேறுபாடுகளை (Time zone) யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது.

ரஷ்யா உலகிலேயே அதிகமான அளவு காட்டு பகுதியை (8,087,900 ச.கிமீ) கொண்டுள்ளதுடன், இங்குள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகமாகவும் உள்ளது.



உலகிலேயே மிகப் பொரிய தீவு எது? கிறீன்லாந்து



கிறீன்லாந்து ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு.

உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும்.

ஆனால் இப்பெருநிலத்தில் மொத்தம் 55,984 பேரே வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையின் அடிப்படையில் மக்கள்தொகை அடர்த்தி குறைவான நிலப்பரப்பு ஆகும்.

இது புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவான போதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது.

உலகிலேயே மிகப் பொரிய பாலைவனம் எது? சஹாரா பாலைவனம்



ஆபிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்).

இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது.

அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக் கடற்பகுதி, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புக்களை இணைக்கின்றது.

உலகிலே மிகப் பெரிய வளைகுடா எது? மெக்சிகோ வளைகுடா



மெக்சிகோ வளைகுடா (Gulf of Mexico) வட அமெரிக்காவின் தென்பகுதியில் அட்லான்டிக் பெருங்கடலுக்கும் கரிபியக் கடலுக்கும் நீட்சியாக ஒரு வளைகுடா ஆகும்.

1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டது கிழக்கில் ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், மேற்கு டெக்சஸ் மாநிலம் மற்றும் மெக்சிகோ, தென்கிழக்கு கூபா, வடக்கு லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, புளோரிடா ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன.

இந்த வளைகுடாவில் மிசிசிப்பி, ரியோ கிராண்டே, சாட்டஹூச்சி, மற்றும் வேறு சில ஆறுகள் பாய்கின்றன.

உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது? ஆசியக் கண்டம்



உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும்.

புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.

உலகிலேயே மிகப்பெரிய நீர்விழ்ச்சி எது? ஏஞ்சல்



ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உலகில் மிக உயரமான தடையின்றி விழுகின்ற அருவியாகும். வெனிசுலா நாட்டிலுள்ள, கனைமா தேசியப் பூங்காவில் அமைந்துள்ள இந்த அருவி 979 மீட்டர் (3,212 அடி) உயரமானது.

இது 807 மீட்டர் (2,648 அடி) தடையின்றி விழுகின்றது. இது சுருன் ஆற்றில் அமைந்திருக்கிறது.













0 comments:

Post a Comment