06:01
0

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட் போன்கள் வைத்துள்ளனர்.

இதிலும், சிரு குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்கள் கேம் விளையாடுவதற்காகவே ஸ்மார்ட் போன்களை வாங்கி கொடுக்கிறார்கள்.

இதனால், தினம் தினம் ஸ்மார்ட் போன்கள் தொலைக்கப்படுவதும், களவாடப்பட்டு விடுவது அதிகளவில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தொலைந்து போன ஆண்ட்ராய்டு கைப்பேசியினை சுலபமாக கண்டறிய பல வழிகள் இருக்கின்றன.

அவற்றில் ஒரு சிறப்பான வழி தான் Find My Phone.

இப்போது, இந்த எளிமையான வழியின் மூலம் தொலைந்த கைப்பேசியினை கண்டறியும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

முதலில் உங்கள் கணனியில் ப்ரவுஸரை ஓபன் செய்து தொலைந்த உங்கள் போனில் பயன்படுத்திய கூகுள் அக்கவுண்டை லாக்-இன் செய்யவும்.
லாக் இன் செய்த பின்பு, search பாக்ஸில் find my phone என டைப் செய்யவும்.
இப்போது, உங்கள் மொபைல் இருக்கும் இடத்தின் பின் பாய்ண்ட் தெரியவரும்.
பின்பு, சரியான இடத்தினை கண்டறிய மேப்பில் தெரியும் ரிங் என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.
ரிங் பொத்தானை க்ளிக் செய்தவுடன் உங்கள் கைப்பேசியானது பலமான சத்ததுடன் ஒலி எழுப்ப ஆரம்பிக்கும்.
ஒரு வேளை உங்கள் கைப்பேசி உங்கள் அருகில் இருந்தால் இந்த வழியானது உங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

0 comments:

Post a Comment