05:57
0

பூமியைத் தாண்டி விண்வெளியிலும் பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு சிம்ம சொற்பனமாக இன்றும் காணப்படுவது ஏலியன்கள் ஆகும்.

பூமிக்கு வெளியில் வேறொரு கிரகத்தில் வசிக்கலாம் எனக் கருதப்படும் ஏலியன்கள் பூமிக்கு வந்து செல்வதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ஏலியன்கள் தொடர்பில் ஆராய்ச்சிகள் இடம்பெற ஆரம்பித்தன.

இவ்வாறிருக்கையில் ஏலியன்களின் வாழ்க்கை தொடர்பில் சனிக் கிரகத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விஞ்ஞானிக் திட்டம் தீட்டி வருகின்றனர்.

இவ் ஆய்விற்கு அதி உயர தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதுடன் Titan மற்றும் Enceladus ஆகிய துணைக் கோள்களையும் ஆய்வுக்குட்படுத்தவுள்ளனர்.

இந்த திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கடந்த வாரம் நடைபெற்ற American Geophysical Union (AGU) மாநாட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆய்வு இரு கட்டங்களாக இடம்பெறவுள்ளதுடன், முதலாவதாக Enceladus Life Finder (ELF) எனும் திட்டமும், அடுத்ததாக Explorer of Enceladus and Titan (E2T) எனும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இவ் ஆய்வினை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.

0 comments:

Post a Comment