04:56
0

மனிதனின் பரிணாம வளர்ச்சியானது குரங்கிலிருந்து தோன்றியதாக ஒரு கருத்து நிலவுகின்றது.

இக்குரங்கு இனமானது இராட்சத உருவத்தினைக் கொண்டதாக இருக்கலாம் எனவும் அனுமானிக்கப்பட்டுள்ளது.

இதனை நிரூபிக்கும் விதமாக அவ்வப்போது சில சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் வரிசையில் சுமார் 3.7 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட பாதச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை எமது முன்னோர்களின் பாதச் சுவடுகளில் மிகவும் பெரியது என கருதப்படுகின்றது.

தன்சானிய நாட்டிலேயே இவ்வாறான 13 பாதச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


தன்சானியாவில் உள்ள Dar es Salaam பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த பாதச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் இச்சுவடுகள் ஒவ்வொன்றும் சுமார் 10 அங்குலங்கள் வரை நீளமானதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment