உலகளவில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொது பிரச்சனை அதில் அதிக நேரம் சார்ஜ் நிற்காமல் இருப்பது தான்!
அதற்கு ஒரு சூப்பர் தீர்வாக தற்போது பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆர்கானிக் பாலிமரானால் ஆன ஸ்மார்ட்போன்களை கண்டுபிடித்துள்ளனர்.
இதன் சிறப்பு என்னவென்றால், இந்த மொடல் போன்களின் திரையை விரலால் தொட்டால் தானாகவே சார்ஜ் ஏறும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் உள்ள வயர்லெஸ் சென்சார்கள் என்ற தொழில்நுட்பம் இந்த விடயத்தை சாத்தியமாக்க உதவியிருக்கிறது.
அயனுக்குரிய டையோடு இந்த ஆர்கானிக் போன்களில் இணைக்கப்பட்டுள்ளதால் பேட்டரிக்கு தேவையான மைக்ரோவாட்ஸ் மின்சாரம் இதன் மூலம் கிடைக்கிறது என்பது இதில் முக்கிய அம்சமாகும்.
0 comments:
Post a Comment