18:21
0

சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களின் வளர்ச்சியால் பின்நோக்கி சென்றது நோக்கியா.

இந்நிலையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, நோக்கியா E1 மற்றும் நோக்கியா D1 ஆகிய பெயர்களில் புதிதாக நோக்கியா மொபைல்களை உருவாக்கி உள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த நோக்கியா மொபைல்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா E1 மற்றும் நோக்கியா D1

நோக்கியா E1 மாடல் போனின் முன்பக்கத்தில் மிகவும் சென்சிட்டிவ் கீ பட்டன்கள் மற்றும் இரண்டு மாடல்களிலுமே LED பிளாஷ்லைட் உடன் கூடிய டிஸ்ப்ளே இருக்கும் என்று கூறப்படுகிறது.

நோக்கியா D1 மாடல் ஸ்மார்ட்போன் தற்போது வெளிவரும் மாடல்களுடன் ஒப்பிடும்போது எடை மற்றும் டிஸ்ப்ளே சைஸ் வித்தியாசமாகவும், பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் போனின் வலது புறத்தில் இரண்டு மாடல்களிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த இரண்டு மாடல்களும் அதிநவீன வசதிகளுடன் இருப்பதால், இதன் விலையும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் நோக்கியா மாடலுக்கு என்று அதிக ரசிகர்கள் இருந்து வருவதால், புதியதாக வெளிவர இருக்கும் நோக்கியாவின் E1 மற்றும் D1 மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment