செல்போன்கள் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் சாம்சங் மற்றும் ஐபோன் நிறுவனங்கள் தங்கள் புதிய மொடல் போன்களை விரைவில் வெளியிடவுள்ளது.
தனது பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில் ஐபோன் நிறுவனம் ஐபோன் 8 மொடலையும், சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி S8 மொடலையும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி S8 5.5 அங்குலம் டிஸ்ப்ளேவுடனும், ஐபோன் 8 5.2 அங்குல டிஸ்ப்ளேவுடனும் வருகிறது.
இதுவரை இல்லாத சிறப்பம்சமாக கேலக்ஸி S8-ல் AI என்று சொல்லப்படும் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் முறை வரவுள்ளது. இதில் இருவகை உள்ளது ஆண் AI க்கு பிக்ஸ்பை என்றும், பெண் AI க்கு கேஸ்ட்ரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதே போல இதுவரை வந்த ஆப்பிள் ஐபோன்கள் மொடலில் இருந்த AI வசதிகள் ஐபோன் 8லிலும் சாம்சங்கை விட சற்று வித்தியாசமாக உள்ளது.
ஐபோனுக்கு இது பத்தாவது ஆண்டு என்பதால் இதுவரை வந்த மொடல்களிலேயே இது சிறந்ததாக இருக்க வேண்டும் என கருதுகிறது.
அதே போல சாம்சங்கின் கேலக்ஸி S8-லிலும் பல புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டும் விற்பனைக்கு வரவிருப்பதால் இரண்டு மொடல் போன்களுக்கும் மிகப்பெரிய போட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
0 comments:
Post a Comment