பூமி சம்மந்தமாக விஞ்ஞானிகள் பல விதமான ஆய்வுகளை மேற்கொள்வது பலகாலமாக நடந்து வருவது தான்.
தற்போதைய முக்கிய ஆய்வில் ஒரு நாளைக்கு 24 நான்கு மணி நேரம் இருப்பது பூமியில் ஏற்பட்டு வரும் மாற்றத்தால் 25 மணி நேரமாக மாறவுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் Nautical Almanac மற்றும் Durham பல்கலைகழக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கடந்து 27 நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அளவு விரிவடைந்து வருவதாக கூறுகிறார்கள்.
ஆனாலும் இந்த இரண்டு மில்லி நொடிகள் என்பது ஒரு நிமிடமாக மாற இன்னும் 6.7 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என கணித்துள்ள இவர்கள், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என்கின்றனர்.
அதாவது தற்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என இருப்பது 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு 25 மணி நேரம் என மாறக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு சுற்றுசூழல் மாறி வருவது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மாசு, வாயுக்கள், புகைகள் போன்றவைகள் அதிகரித்து வருவதால் காற்றில் அடர்த்தி அதிகரித்து பூமி சுற்றிவரும் நேரத்தின் அளவு அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என தெரியவந்துள்ளது.
இது சம்மந்தமான ஆராய்ச்சிகள் ஈர்ப்பு கோட்பாடுகள், கிரகணங்கள் ஆகியவை மூலமும் சூரியனை சுற்றும் பூமி போன்ற முக்கிய விஞ்ஞான விடயங்கள் மூலமும் பழங்காலத்திலிருந்தே சீனர்கள், கிரேக்கர்கள், ஐரோப்பியர்கள் போன்றவர்களால் நடத்தபட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment