17:04
0

அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளி தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றது.

விண்வெளியில் சர்வதேச ஆய்வு மைத்தையும் நிறுவியுள்ள நாசா விண்வெளி போக்குவரத்தினை விரைவுபடுத்தும் மார்க்கங்களை கண்டறியும் முயற்சியிலும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

இம் முயற்சியின் பயனாக நனோ ஸ்டார்ஷிப் எனும் விண்வெளி ஓடத்தினை வடிவமைத்து வருகின்றது.

இவ் விண்கலமானது ஒளியின் வேகத்தின் 20 சதவீத வேகத்தில் பயணம் செய்யக்கூடிய வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் பயணிக்கும் வீரர்களுக்கு உண்டாகும் கதிர்ப்பு தாக்கத்தினை குறைக்கும் வகையில் இவ் விண்வெளி ஓடமானது சிலிக்கன் டை ஒக்சைட் கொண்ட நனோ தொழில்நுட்பத்தினால் வடிவமைக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment