மொபைல் சாதனங்களுக்கான புரோசசர் வடிவமைப்பு நிறுவனங்களில் முன்னணியில் திகழும் Qualcomm நிறுவனம் புதிய புரோசசர் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
Snapdragon 835 எனும் இப் புதிய புரோசசர் ஆனது முற்றுமுழுதாக ஸ்மார்ட் கைப்பேசிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வினைத்திறன் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ள இப் புரோசசர் இவ் வருடம் முதல் உயர் ரக கைப்பேசிகளில் பயன்படுத்தப்படவிருக்கின்றன.
X16 LTE தொழில்நுட்பத்திற்கு இசைவாக்கம் கொண்டிருப்பதுடன், 2×2 802.11ac Wave 2 Wi-Fi மற்றும் Bluetooth® 5 என்பவற்றிற்கும் இசைவாக்கம் கொண்டதாக காணப்படுகின்றது.
மேலும் இப் புரோசசரின் ஊடாக மல்டிமீடியா தொழில்நுட்பம், மின்கலத்தின் பாவனைத்தன்மை என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment