சனிக்கிரகத்தின் சந்திரன்களில் ஒன்றான டைட்டனின் மேற்பரப்பில் ஒரு அசாதாரணமான நிலைமை அதிகரித்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதிநவீன கெமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட சில புதிய புகைப்படங்களை ஆராய்ந்த பின்னரே அவர்கள் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
டைட்டனை சுற்றி கடந்த சில வருடங்களாக மேகமூட்டங்கள் காணப்படவில்லை. எனினும் புதிய படங்களில் டைட்டனின் மேற்பரப்பில் மேகங்கள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
டைட்டன் சந்திரனின் மேற்பரப்பில் 5 ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பில் மேகமூட்டங்கள் பரவியுள்ளன. மேலும் டைட்டன் அதிக குளிரான சுற்றாடலை கொண்ட பனியுடன் கூடிய துணைக்கோள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த துணைக்கோளில் நீர்வாயு மற்றும் கார்பன் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் டைட்டன் மேற்பரப்பில் மேகமூட்டங்கள் அதிகரித்துள்ளமை குறித்து நாசா விஞ்ஞானிகள் இதுவரை அறிவியல் ரீதியாக தெளிவுப்படுத்தவில்லை.
இந்த நிலையில், டைட்டனில் காணப்பட்ட அதிகளவான குளிர் தன்மை நீங்கி, அது உயிர்வாழக் கூடிய கிரகமாக உருவாகி வருவதாக இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள சிலர் கூறுகின்றனர்.
மேகங்கள், நீர் வாயு மற்றும் கார்பன் வாயு என்பன இருப்பதால், டைட்டனில் சாதாரணமான மழைப் பெய்யக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில், செவ்வாய் கிரகத்திற்கு அடுத்ததாக உயிர் வாழக் கூடிய அடுத்த கிரகமாக டைட்டன் இருக்கும் எனவும் இது எதிர்கால மனிதனுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் எனவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment