02:47
0

இன்று ஸ்மார்ட் கைப்பேசிகள் பாவிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவரது வாழ்விலும் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது.

கைப்பேசிகள் இன்று பல்வேறு பரிணாமத்தைப் பெற்று நிற்கின்ற போதிலும் ஆப்பிள் நிறுவனமே முதன் முறையாக ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது.

அதாவது 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி அறிமுகம் செய்தது. இவ்வாறு அறிமுகம் செய்து இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது.

இதற்கிடையில் பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகளைச் சந்தித்து இன்று உலகெங்கிலும் அதிகளவில் விற்பனையாகும் கைப்பேசிகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

ஐபோன்கள் முதன் முதலாக 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த போதிலும் முதலாவது விற்பனையானது அதே ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்காவிலும், நொவெம்பர் மாதம் ஐரோப்பிய நாடுகளிலும் இடம்பெற்றிருந்து.
2007ம் ஆண்டில் மட்டும் 3.4 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்திருந்தது.

அத்துடன் அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 1 பில்லியனிற்கும் மேற்பட்ட ஐபோன்களை விற்பனை செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் 15 வித்தியாசமான ஐபோன்களை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம் இறுதியாக கடந்த ஆண்டு iPhone 7 மற்றும் 7 Plus எனும் புதிய மொடல்களை அறிமுகம் செய்திருந்தது.

0 comments:

Post a Comment