மாயத்தோற்றத்தினை உருவாக்கக்கூடிய Virtual Reality எனும் தொழில்நுட்பமானது தற்போது வெகுவாக பிரபல்யம் அடைந்து வருகின்றது.
இத் தொழில்நுட்பத்தினைக் கொண்டு கம்பியூட்டர் ஹேம்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிறிய ரக கமெரா ஒன்றும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
TwoEyes VR என அழைக்கப்படும் இக் கமெரா ஆனது மனிதர்களின் இரு கண்களைப் போன்று செயற்படுவதுடன், முன்புறம், பின்புறம் என இரண்டு பக்கங்களிலும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக 360 டிகிரி புகைப்படங்களை உருவாக்க முடியும்.
தவிர 4K வீடியோக்களையும் உருவாக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.
தற்போது இக் கமெராவானது 40,000 டொலர்கள் நிதியினை திரட்டும் நோக்கில் Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கமெராவின் செயற்பாட்டினை விளக்கும் வீடியோ டெமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment