ரயில்கள் தற்போது நிலக்கரி, டீசல் உட்பட மின்சக்தியில் இயங்கி வருகின்றன.
எனினும் காற்றின் உதவில் இயங்கக்கூடிய ரயில்கள் இதுவரை குறைந்தளவே சேவையில் உள்ளன.
இதனை அதிகப்படுத்த நெதர்லாந்தின் தேசிய ரயில்வே நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி அனைத்து மின்சார ரயில்களையும் 100 சதவீதம் காற்று சக்தியில் இயங்கக்கூடிய ரயில்களாக மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான அடித்தளம் 2015ம் ஆண்டிலேயே போடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2018ம் ஆண்டில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை தற்போது சேவையில் உள்ள காற்றில் இயங்கும் ரயில்களில் நாள்தோறும் சுமார் 600,000 பயணிகள் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வகை ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டவையாகும்.
0 comments:
Post a Comment