நாம் கடைகளில் வாங்கும் ஒருசில பழங்களில் ஸ்டிக்கர் குறியீடுகள் ஒட்டப்பட்டிருக்கும் அதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் யோசித்தது உண்டா?
பழங்களில் இருக்கும் ஸ்டிக்கர் குறியீட்டிற்கான அர்த்தம் என்ன?
சந்தைகளில் மரபணு மாற்றம் செய்யப்பட, நச்சுக்கொல்லியினால் தயாரிக்கப்பட்ட மற்றும் இயற்கை முறையில் இருக்கும் காய்கறி மற்றும் பழங்கள் போன்ற அனைத்து வகை காய்கறிகளையும் விற்பனை செய்கிறார்கள்.
எனவே இது போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு தான் பழங்களில் பி.எல்.யு எனும் குறியீட்டு போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.
பி.எல்.யு (PLU) ஸ்டிக்கர் என்பது Price Look Up நம்பர் எனப்படுகிறது. அப்படியென்றால் நாம் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றம் அல்லது இயற்கையானது, இது போன்ற தகவல்களை தெரிந்துக் கொள்ள இந்த பி.எல்.யு குறியீட்டு எண்கள் பயன்படுகிறது.
குறியீட்டை வைத்து கண்டுபிடிப்பது எப்படி?
காய்கறி மற்றும் பழங்களில் 1441 இது போன்று நான்கு இலக்க குறியீடு இருந்தால் அது வழக்கமான முறையில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
நாம் வாங்கும் காய்கறி மற்றும் பழங்களில் 81442 இது போன்று 8-ல் துவங்கும் ஐந்து இலக்க குறியீட்டு எண் இருந்தால், அது மரபணு மாற்றம் செய்து, விளைவிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
காய்கறி மற்றும் பழங்களில் 94532 இது போன்று 9-ல் துவங்கும் ஐந்து இலக்க பி.எல்.யு குறியீடு எண் இருந்தால், அது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப் பொருள் என்பதைக் குறிக்கிறது.
குறிப்பு
மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி உணவுகளை நாம் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், அது நமக்கு நாள்பட புற்றுநோய் கட்டிகளை ஏற்படுத்தும் காரணியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment