20:37
0

மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு மூலங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை தெரிந்ததே.

இவற்றில் தற்போது சூரிய சக்தி மூலம் மின்சக்தியை பிறப்பிக்கும் முறைக்கே அதிக வரவேற்பு உருவாகிவருகின்றது.

இதற்கு காரணம் செலவு குறைவாக இருப்பதும், சூழலுக்கு பாதிப்பு இல்லாது காணப்படுவதுமாகும்.

இவ்வாறான நிலையில் தற்போது வெவ்வேறு மூலங்களில் இருந்து மின்சக்தியை பிறப்பிக்கக்கூடிய மற்றுமொரு கனிமப் பொருள் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இக் கனிமமானது சூரிய ஒளி, வெப்பம், அசைவு என்பவற்றினைப் பயன்படுத்தி மின்சக்தியை பிறப்பிக்கவல்லது.

KBNNO நனோ பளிங்கு எனும் இக் கனிமத்தினை பின்லாந்திலுள்ள Oulu பல்கலைக்கழக விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் இதனை கைப்பேசிகள், லேப்டொப் போன்றவற்றில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும், கூடிய மின்சக்திய தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்த முடியாது எனவும் குறித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment