இந்த வருடம் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களின் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கைப்பேசியாக iPhone 8 காணப்படுகின்றது.
பல சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகக் காத்திருக்கும் இக் கைப்பேசியானது இந்தியாவில் வைத்தே தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன.
அத்துடன் மூன்று பதிப்புக்களாகவும் உருவாக்கப்படவுள்ள இக் கைப்பேசி இவ் வருடம் செப்டெம்பர் மாதத்தில் அறிமுகமாகவுள்ளது.
இந்நிலையில் இவற்றின் விலை தொடர்பான ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.
குறித்த தகவலின்படி 1,000 டொலர்களிலும் சற்று அதிகமாகவே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வெளியான 256GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட iPhone 7 Plus கைப்பேசியின் விலை 969 அமெரிக்க டொலர்களாகவே காணப்பட்டது.
இதேவேளை iPhone 8 கைப்பேசிகளில் iOS 11 இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment