அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாக Fitbit காணப்படுகின்றது.
இந்நிறுவனம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் Pebble எனும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை அறிமுகம் செய்திருந்தது.
இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களே கடந்துள்ள நிலையில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
அதாவது இதுவரை 23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஸ்மார்ட் கடிகாரங்கள் விற்பனையாகியுள்ளன.
இதேவேளை இந்நிறுவனம் Vector Watch எனும் பிறிதொரு ஸ்மார்ட் கடிகார நிறுவனத்தினை 15 மில்லியன் டொலர்கள் செலுத்தி கொள்வனவு செய்துள்ளது.
ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களும் ஸமார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் Fitbit நிறுவனத்தின் கடிகார விற்பனையானது சாதனையாக பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment