20:29
0

மாயத்தோற்றத்தை உருவாக்கும் Virtual Reality தொழில்நுட்பமானது சம காலத்தில் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் அதிகமாக இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி கணினி ஹேம்களே உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப்படியிருக்கையில் தற்போது Independent VR நிறுவனம் மாயத்தோற்றத்தினை தரக்கூடிய கணினி கீபோர்ட் ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.

எனினும் இக் கீபோர்ட் ஆனது Oculus Rift, HTC Vive ஆகிய மாயத்தோற்றத்தினை வழங்கும் ஹெட்செட்களுடன் இணைத்தே எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கீபோர்ட்டிற்கான கோப்புக்களை GitHub எனும் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து VR முறைமையுடன் இணைத்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment