சனத்தொகை அதிகரிப்பு மற்றும் தொழிற்சாலைகளின் அதிகரிப்பு போன்றவற்றினால் இன்று இயற்கை எரிபொருள் வளமானது மிக வேகமாக அழிவடைந்து வருகின்றது.
அத்துடன் இவ் எரிபொருட்களினால் சூழல் மாசடைதலும் வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனை குறைக்கும் நோக்கில் உலகின் பல நாடுகள் மின்சார உற்பத்தியில் சோலார் பேனல்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றது.
இவற்றில் சீனாவும் விதிவிலக்கு அல்ல. உலகிலேயே மிகவும் பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் சீனாவிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையமானது 10 சதுர மைல்கள் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 4 மில்லியன் வரையான சோலார் பேனல்களையும் கொண்டுள்ளது.
இதன் ஊடாக 850 மெகாவாட்ஸ் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியின் ஊடாக 140,000 வீடுகள் பயன்பெற்று வருகின்றன.
மேலும் இந் நிலையமானது 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 103 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த சோலார் பேனல் நிலையம் 2013ம் ஆண்டும், 2017ம் ஆண்டும் விண்வெளியிலிருந்து பார்க்கும்போது காட்சி தரும் தோற்றத்திற்கான படங்கள் தற்போது நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment