மொபைல் போனில் தகவல்களை பதிந்து கொள்வதற்காக மெமரி கார்டுகளை வாங்கி பயன்படுத்துகிறோம்.
விலை குறைந்த தரமில்லாத மெமரிகார்டினை பயன்படுத்தும் போது, சில சமயங்களில் அது கரப்ட்(Corrupt) ஆகி பிரச்சனையினை ஏற்படுத்தும்.
கரப்ட் ஆன மெமரிகார்டிலிருந்து மீண்டும் நாம் நமது தகவல்களை பெறமுடியும். அதற்கான வழிமுறைகளை காணலாம்.
வகை
நாம் பயன்படுத்தும் மெமரி கார்டின்(Memory Card Type) வகையினை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.
அதில் எவ்வளவு ஸ்டோர்(Store) செய்யமுடியும் என்பதையும் அது சாதாரண வகையினை சேர்ந்ததா அல்லது அதிகமாக பதிந்து வைத்து கொள்ளக்கூடியதா? என அறிய வேண்டும்.
டிவைஸ்(Device)
நமது தகவல்கள் எஸ்டிஎப்சி(SDHC Card) கார்டில் இருந்தால் அதற்கான எஸ்டிஎப்சி டிவைஸினை(SDHC Device) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சில டிவைஸ்களில் மென்பொருள்களை(Software) பயன்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.
அத்தகைய மென்பொருளினை அந்த டிவைஸ் வெளியிட்ட நிறுவனத்தின் வெப்சைட்டுகளை பார்த்து கண்டறியலாம்.
கார்டு ரீடரில் மெமரி கார்டினை பொருத்தவும்
டிரைவ் லெட்டர்(Drive letter) கணினியில் பொருத்தப்படவில்லை என்றால் கணினி ரீட் செய்யாது. சிலவற்றில் ஒரு டிரைவ் லெட்டரை ரீடர் நியமித்திருக்கும்.
நீங்கள் அதன் மீது கிளிக் செய்தால் உங்களுக்கு இன்சர்ட் டிஸ்க் டூ ட்ரைவ் இ (insert disk into drive E) தகவல் கிடைக்கும். அப்படியென்றால் இதனால் கார்டை ரீட் பண்ண முடியவில்லை என்று அர்த்தம்.
பைல்கள்(File)
கார்டு ரீடரானது சில பைல்களை மட்டும் கண்டறிந்து மற்றவற்றினை விட்டுவிட்டால் சில பைல்கள் மட்டுமே அழிந்துள்ளது. அந்த அழிந்த பைல்களை ரெகவரி ப்ரோகிராம்(Recovery Software or Program) மூலம் பெற இயலும்.
ஸ்கேன்
சில நேரங்களில் கார்டினை ஸ்கேன் செய்வதால் இந்த பிரச்சனையினை தீர்க்க இயலும். மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ( My computer or windows explorer) கார்டை தேர்ந்தெடுத்து எடுத்து அதன் மீது ரைட் க்ளிக் செய்யவும்.
பாப் அப் மெனுவிலிருந்து ப்ராப்பர்டீஸ் மீது கிளிக் செய்யவும்.
இப்பொழுது டூல்ஸ் டேபை தேர்வு செய்து எரர் செக்கிங் பட்டன் (Error checking button) மீது கிளிக் செய்யவும். செக் பாக்ஸை கிளிக் செய்து பைல்-ன் தவறுகளை சரி செய்யவும்.
பின்னர், பைல்களின் பெயர்கள் காண்பிக்கப்படும். அதன்பின்னும் சரிசெய்ய முடியவில்லை எனில் டிரைவ் லெட்டர் மீது ரைட் கிளிக் செய்து புரொபர்டீஸினை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின்னர் பைல்கள் காண்பிக்கப்படும்.
பைல் சேவ்
உங்கள் கார்ட் ஓகே என்று ரீட் செய்தும் ஃபைலை சேமிக்க முடியவில்லை என்றால் உங்கள் கார்ட் ரைட் ப்ரொடக்டட் (write protected) ஆக இருக்கலாம்.
இதற்கு கார்டின் ஓரத்தில் உள்ள லாக் செல்லவும். இந்த சுவிட்ச் நழுவி இருந்தால் இதை லாக்டு ஆர் ரைட் ப்ரொடக்டட் (locked or write protected) என்று உறுதி படுத்தி கொள்ளுங்கள்.
சுவிட்ச் (Switch)மூடபடாத நிலையில் இருக்கும் பொழுது இதை சேவ் செய்யவும்.
0 comments:
Post a Comment