உலகில் வாழ்ந்து அழிந்த விலங்குகளில் மிகவும் பிரம்மிக்க வைக்கும் விலங்காக டைனோசர்கள் காணப்படுகின்றன.
இவற்றில் பறக்கக்கூடிய இனங்கள் உட்பட வெவ்வேறு வகை இனங்கள் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தற்போது 75 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் மற்றுமொரு டைனோசர் இனம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
இவை அதிக உணர்திறன் அல்லது மோப்ப சக்தியினை கொண்ட இனமாகக் காணப்படுவதுடன் இதற்கு ஏற்ற வகையில் அதன் முகங்கள் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப் புதிய இனத்திற்கு Daspletosaurus horneri என பெயரிடப்பட்டுள்ளது.
இவை 9 மீற்றர் நீளமானதாகவும், 2 மீற்றர்கள் உயரம் வரையிலும் வளரக்கூடியவையாக காணப்பட்டுள்ளன.
ஒரு இனத்தின் அழிவின் முடிவில் மோப்ப திறன் வாய்ந்த இப் புதிய இனம் தோற்றம் பெற்றிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இவற்றின் முகத்தில் முதலைகளில் காணப்படக்கூடிய மிகவும் சிக்கல்தன்மை வாய்ந்த நரம்பு வலையமைப்பு காணப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.
0 comments:
Post a Comment