அண்டவெளியில் காணப்படும் மர்மமங்கள் நிறைந்த வான்பொருட்களில் நட்சத்திரங்களும் ஒன்றாகும்.
சில நட்சத்திரங்கள் அறியப்படாத கிரகங்களுக்கு சூரியனாகவும் காணப்படுகின்றன.
இவ்வாறான நட்சத்திரங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பது பற்றி அறிய பல்வேறு ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக Starquakes இன் ஒலி அலைகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
Starquakes எனப்படுவது நட்சத்திரங்களில் உண்டாகும் அலைவுகள் அல்லது ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கின்றது.
இதன்போது ஏற்படும் ஒலி அலைகளை ஆய்வு செய்வதன் ஊடாக நட்சத்திரங்களின் தோற்றம் பற்றிய ஆதாரங்களை திரட்ட முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இவ் ஆராய்சியில் அவுஸ்திரேலியாவின் New South Wales பல்கலைக்கழக சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment