22:13
0

சாம்சுங் நிறுவனமானது Galaxy C5 Pro எனும் புத்தம் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 5.2 அங்குல அளவுடையதும் AMOLED தொழில்நுட்பத்தினை உடையதுமான தொடுதிரையினை கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 626 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம், 2600 mAh மின்கலம் என்பனவும் காணப்படுகின்றது.

இதன் சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

தவிர தலா 16 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, பிரதான கமெரா என்பனவும உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் விலையானது சீன பெறுமதியில் 2,499 யுவான்களாகவும், 362 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது.

0 comments:

Post a Comment