20:47
0

தொடுதிரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு கைப்பேசி சந்தையில் அதிக வரவேற்பு காணப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில் வளையக்கூடிய திரைகள், நீட்சி அடையக்கூடி திரைகள் என அடுத்த தலைமுறை திரைகளை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் முனைப்பாக ஈடுபட்டுள்ளன.

இம் முயற்சியின் பயனாக தற்போது அதிகமாக வளையக்கூடியதும், நீட்சி அடையக்கூடியதுமான தொடுதிரை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கனேடிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இத்திரையானது எதிர்காலத்தில் ரேபோக்களிலும் பயன்படுத்தப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதாவது சென்சார்கள் பொருத்தப்பட்ட செயற்கை தோலாக ரோபோக்களில் பயன்படுத்தப்படலாம் என்பதே அந்த ஊகம் ஆகும்.

இதேவேளை தற்போது உள்ள ஐபோன்களின் திரைகளில் அமுக்கத்தை உணரக்கூடிய தொழில்நுட்பம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அமுக்கத்தின் ஊடாகவே முப்பரிமான தொடுகை ஐபோன்களில் சாத்தியமாகியுள்ளது.

தற்போது பரிசோதனைக்காக தயாரிக்கப்பட்டுள்ள தொடுதிரையானது 5cm x 5cm அளவுடையதாகக் காணப்படுகின்றது.

0 comments:

Post a Comment