போக்குவரத்து துறையில் ஹைப்பர் லூப் எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை உட்புகுத்துவது தொடர்பில் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது இதன் ஆரம்ப கட்ட பணிகளை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இப் பணிகள் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள Nevada எனும் பாலைவனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மணிக்கு சுமார் 1,220 கிலோ மீற்றர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடிய இத் தொழில்நுட்பத்தினை இந்த வருடமே பரீட்சித்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 500 மீற்றர்கள் வரை அமைக்கப்பட்டுள்ள இப் பாதையானது சுமார் 1 மில்லியன் கிலோகிராம்கள் எடை கொண்டதாக இருக்கின்றது.
அடுத்த சில மாதங்களில் மூன்று கிலோ மீற்றர்கள் வரை இப்பாதையானது அமைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் பயணிகளை ஏற்றாது தனியாக பரீட்சிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.
0 comments:
Post a Comment