சாம்சுங் நிறுவனமானது Samsung Galaxy S8, S8 Plus ஆகிய இரு புதிய கைப்பேசிகளை வடிவமைத்துள்ளது.
இக் கைப்பேசிகளை இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் இவற்றின் விலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி Samsung Galaxy S8 கைப்பேசியானது 799 யூரோக்கள் ஆகவும், S8 Plus ஆனது 899 யூரோக்கள் ஆகவும் காணப்படுகின்றது.
மார்ச் மாதம் 29ம் திகதி அறிமுகப்படுத்தப்படுகின்ற போதிலும், ஏப்ரல் மாதத்திலிருந்தே விற்பனைக்கு வரவுள்ளது.
அத்துடன் முதன் முறையாக ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளதுடன், ஏப்ரல் மாதம் 21ம் திகதி உலக அளவில் அறிமுகமாகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment