Google Home எனும் சாதனத்தினை அறிமுகம் செய்துள்ள கூகுள் நிறுவனம் அடுத்ததாக Google WiFi எனும் சாதனத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இச் சாதனத்தின் ஊடாக அனைத்து வகையான மொபைல் மற்றும் கணினி சாதனங்களை இணைத்து இணையத்தளத்தினை பயன்படுத்த முடியும்.
தவிர தொலைக்காட்சிகளை இணைக்கவும் முடியும்.
சிறந்த Wi-Fi இணைப்பினைத் தரக்கூடிய இச் சாதனமானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி விற்பனைக்கு வருகின்றது.
எனினும் முதன் முதலாக ஐக்கிய இராச்சியத்திலேயே இது அறிமுகம் செய்யப்படுகின்றது.
மேலும் இதனை ஏப்ரல் 6ம் திகதி அன்றிலிருந்து Google Store, Argos, Maplin, John Lewis ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
சில நாட்களின் பின்னர் அமேஷானிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விலையானது 129 யூரோக்களாக இருப்பதுடன், இரண்டினைக் கொண்ட பொதி ஒன்றினைக் கொள்வனவு செய்யும்போது 229 யூரோக்கள் மட்டுமே அறவிடப்படும்.
0 comments:
Post a Comment