04:20
0

ஹைதராபாத்தில்11 வயது சிறுவன் ஒருவர் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் உள்ள புனித மேரி ஜீனியர் கல்லூரியில் அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்னும் 11 வயது சிறுவன் பயின்று வருகிறார்.

இவர் கடந்த மார்ச் மாதத்தில் 12ம் வகுப்புக்கான தேர்வினை எழுதினார். கடந்த ஞாயிறன்று (16.4.2017) வெளியிடப்பட்ட அத்தேர்வு முடிவில் 63 சதவீத மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்திலேயே மிக குறைந்த வயதில் 12ம் தேர்ச்சி பெற்றவர் அகஸ்தியா தான் என்றும் வருங்காலத்தில் மருத்துவர்ஆவதே அவரது கனவு என்றும் அவரது தந்தை அஸ்வனி குமார் கூறியுள்ளார்.

மேலும், இவர்9 வயதிலேயே 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment